தனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்

36
தனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் | Akshay Kumar Demands Rs 120 Crore For Dhanush Movie.
தனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம் | Akshay Kumar Demands Rs 120 Crore For Dhanush Movie.

தனுஷுடன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்காக ரஜினி பட வில்லன் நடிகர் 120 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படத்திற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் மீண்டும் ஷமிதாப் என்னும் படத்தில் நடித்தார். இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் இருந்த தனுஷ், தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது மீண்டும் தமிழ், இந்தியில் தயாராகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை ஆனந்த் எல். ராய் டைரக்டு செய்கிறார்.

இதில் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள் தனுசுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்து இருந்தார். தனுஷ் படத்தில் நடிக்க அக்‌ஷய்குமார் ரூ.120 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதை கொடுக்க தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.