இந்திய டென்னிஸ் வீரரான குணேஸ்வரன் தகுதி சுற்றில் தோல்வி அடைத்தார் | ஆஸ்திரேலியா ஒபேன் டென்னிஸ்

75
guneshwar was failed in australian open tennis tournament
இந்திய வீரரான குணேஸ்வரன் தகுதி சுற்றில் தோல்வி அடைத்தார் | ஆஸ்திரேலியா ஒபேன் டென்னிஸ்

2020 ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஆஸ்திரேலியவில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மெல்போர்னில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதிசுற்று ஆட்டங்கள் அங்கு நடந்து கொண்டு வருகின்றன .

இதன் ஆண்கள் ஒற்றையர் தகுதி சுற்றில் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், நேற்று கடைசி ரவுண்டில் எர்னெஸ்ட்ஸ் குல்பிசுடன் (லாத்வியா) மோதினார்.

இதில் தரவரிசையில் 122-வது இடம் வகிக்கும் குணேஸ்வரன் 6-7 (2), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார். ஏற்கனவே ராம்குமார், சுமித் நாகல், அங்கிதா ரெய்னா ஆகிய இந்தியர்களும் தோற்று வெளியேறி விட்டனர். இதன் மூலம் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் பிரிவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.