ரெட் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?

41
Is Drinking Red wine Good For The Body.
Is Drinking Red wine Good For The Body.

ரெட் ஒயினை மிதமான அளவுகளில் குடித்தால் சில வகை கேன்சர், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். அதுவே அளவுக்கு அதிகமானால் தீங்கு உண்டாகும்.

இன்றைய பாஸ்ட்புட் கலாசாரத்தில் ஒயின் குடிப்பது மக்களிடையே சாதாரண விஷயமாக மாறிவிட்டது. அதிலும் ரெட் ஒயின் பெண்கள் குடிப்பதற்கு ஏற்ற பானமாகும். பெரு நகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்கள் தற்போது ரெட் ஒயினை விரும்பி அருந்துகின்றனர். ரெட் ஒயின் என்பது பல்வேறு வகையான திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.

ரெட் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், சரும பொழிவு மேம்படுவதோடு இளமை தன்மையும் அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ரெட் ஒயினுக்காக பயன்படுத்தப்படும் திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

Is Drinking Red wine Good For The Body.

ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், கல்லீரல் நோய்கள், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். ரெட் ஒயினில் தூக்கத்தை தூண்டும் மெலடோன் என்ற உட்பொருள் அதிக அளவில் உள்ளது. எனவே தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் குடிக்கலாம். ஆனால் இரவு தூக்கத்திற்கு செல்லும் முன்பு குடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குடித்து விட வேண்டும்.

அதே நேரம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவர் ரெட் ஒயினை மிதமான அளவுகளில் குடித்தால் சில வகை கேன்சர், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். அதுவே அளவுக்கு அதிகமானால் தீங்கு உண்டாகும். எனவே அளவோடு அருந்தி வளமான வாழ்க்கைக்கு வழிவகுங்கள்..