தேசிய சீனியர் ஸ்குவாஷ்- அரையிறுதியில் ஜோஸ்னா, சுனைனா

25
தேசிய சீனியர் ஸ்குவாஷ்- அரையிறுதியில் ஜோஸ்னா, சுனைனா | Senior National Squash Joshna Chinappa and Sunayana.
தேசிய சீனியர் ஸ்குவாஷ்- அரையிறுதியில் ஜோஸ்னா, சுனைனா | Senior National Squash Joshna Chinappa and Sunayana.

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனைகளான ஜோஸ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

சென்னை:

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணிக்காக ஆடும் சவுரவ் கோஷல் 11-3, 11-3, 11-1 என்ற நேர் செட்டில் ருத்விக் ராவை (மராட்டியம்) ஊதித்தள்ளி அரையிறுதிக்கு முன்னேறினார். அபய்சிங், ஹரிந்தர் பால்சிங் சந்து (2 பேரும் தமிழகம்), அபிஷேக் பிரதன் (மகாராஷ்டிரா) ஆகியோரும் அரையிறுதியை எட்டினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா 11-4, 11-2, 11-4 என்ற நேர் செட்டில் சச்சிகா பல்வானியை (மகாராஷ்டிரா) வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு தமிழக வீராங்கனை சுனைனா குருவில்லா தன்னை எதிர்த்த சனிகா சவுத்ரியை 11-5, 11-2, 12-10 என்ற நேர் செட்டில் சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் தமிழகத்தின் அபரஜிதா 5-11, 3-11, 8-11 என்ற நேர் செட்டில் தன்வி கன்னாவிடம் (டெல்லி) வீழ்ந்தார்.