காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு ! மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் கண்டனம் !!!

63
thanthai-periyar-statue-vandalised-near-kanchipuram-mk-stalin-ttv-dinakaran
இன்று காலை காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் தந்தை பெரியார் சிலையை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். இதனை கண்டித்து மு.க.ஸ்டாலின், டி டி வி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சென்னையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டதை பற்றி கேள்வி எழுப்பினர்.

மு.க.ஸ்டாலின்: இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்துக்காக 95 வயது வரை பாடுபட்டவர் தந்தை பெரியார், மூத்ததலைவராகிய தந்தை பெரியாரின் சிலையை உடைத்து வேதனைக்குரியதாகும், இக்காரியத்தை செய்தவர்களின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

டிடிவி தினகரன்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே கலியப்பேட்டை எனுமிடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இத்தகைய செயலை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.