நிர்பயா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகளை தூக்கிலிட தயார் ஆகும் டெல்லி திகார் சிறை ! | கடைசி ஆசை !

59
thihar-jail-last-wish-nirbhaya-rapists
நிர்பயா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகளை தூக்கிலிட தயார் ஆகும் டெல்லி திகார் சிறை ! | கடைசி ஆசை !

டெல்லி சட்ட சபை தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடை பெற உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 8 ஆம் தேதி முன்பெ குற்றவாளிகளை பிப்ரவரி 1-ந் தேதி தூக்கிலிட உத்தரவிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மேலும் 4 குற்றவாளிகளை தூக்கில் இடுவதுற்கு முன்பு அவர்களின் கடைசி ஆசையை எழுதிக் கொடுக்குமாறு கேட்டுளோம். இன்னும் அவர்கள் பதில் அளிக்கவில்லை மேலும் அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என ஐஜி ராஜ் குமார் கூறியுள்ளார்.

தங்களது விருப்பங்களை 4 பேரும் தெரிவித்த பின்னர் அது நிறைவேற்றக் கூடியதுதானா என்பதை சிறை நிர்வாகம் ஆலோசித்து முடிவெடுக்கும். தூக்கு தண்டனை கைதிகளின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாது. இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.

கடைசியாக யாரையும் சந்திக்க விரும்புகிறீர்களா?

ஏதேனு சொத்துகள் அல்லது உடைமைகளை விரும்பும் நபர்களுக்கு மாற்றித் தர விரும்புகிறீர்களா?

என்பது உள்ளிட்ட கேள்விகளும் தூக்கு தண்டனை கைதிகளிடம் கேட்கப்பட்டிருப்பதாகவும் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.