தூள் காட்டும் தல அஜித். TRPயில் இன்றும் முதலிடத்தில் விஸ்வாசம்

57
தூள் காட்டிய தல அஜித்
TRPயை அடிச்சு தூக்கிய விஸ்வாசமான தல ரசிகர்கள்.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவே இருந்தது. 2019 பொங்கல் அன்று பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வெளிவந்த்தது. ஏனினும் பேட்ட படம் பொங்கல் வின்னர் என கருதப்பட்டாலும், விஸ்வாசம் படமும் மக்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது தான் உண்மை. கடந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல வசூல் செய்த படங்களில் விஸ்வாசமும் இடம்பெறும். இதற்க்கு முக்கிய காரணம், படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சி தான்.

விவேகத்தின் நஷ்டத்தால் எடுக்க பட்ட இந்த படம், தயாரிப்பாளருக்கு 10 சதவீத லாபத்தை ஈட்டியது. இதற்கிடையில் விஸ்வாசம் படம் வெளியாகி ஒரு வருட காலம் ஆகிய நிலையில், கடந்த வாரம் சனிக்கிழையாமை அன்று மாலையில் விஸ்வாசம் படம் இரண்டாம் முறை TVயில் ஒளிபரப்பப்பட்டது.

இன்று காலை சன் டிவி, பொங்கல் தினத்தில் ஒளிபரப்பப்பட்ட படங்களில் எந்த படத்தை மக்கள் அதிகம் பார்த்திருக்கிறார்கள் என்ற அட்டவணையை வெளியிட்டது. அதில் தீபாவளி அன்று திரைக்கு வந்து வசூலில் சக்க போடு போட்ட பிகில் 16900 BARC இம்ப்ரெஸ்ஸன்ஸோடு முதல் இடத்தில் உள்ளது. விஸ்வாசம் கடந்த நாடு மே 1 அன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் 18000 BARC இம்ப்ரெஸ்ஸன்ஸ் எடுத்து இன்று வரை TRPயில் முதல் இடத்தில் உள்ளத்து.

பிகில் சரியாக பொங்கல் அன்று ஒளிபரப்பப்பட்டது, எனினும் அன்று எல்லா மக்களும் கோவிலுக்கு சென்றிருந்தாலும், பிகில் படத்தின் BARC இம்ப்ரெஸ்ஸன்ஸ் உண்மையாகவே வேற லெவல். இதேபோல் சர்கார் மூன்றாம் முறை தமிழ் புத்தாண்டன்று ஒளிபரப்பப்பட்டது. மூன்றாம் முறையாக ஒளிபரப்பப்பட்டும், 11234 BARC இம்ப்ரெஸ்ஸன்ஸ் எடுத்தது.இதுவே மக்கள் மனதில் தளபதி விஜய் எப்படி இடப்பிடித்துள்ளார் என்பதற்கான சிறந்த உதாரணம்.